மாசிலா உண்மைக் காதலே
முகக் கண்ணாடிமுன் நான்''
'உன்னுள் நான் கலந்துவிட்டேன் இதை
நீ இன்னும் அறியாததேனோ ' என்று
எனைப் பார்த்து என் காதலி கேட்க ..
என் கண்ணின் மணிக்குள் அவள் உருவம்
சிரிக்கும் அந்த இனிய முகம் தெரிய கண்டேன்
என்னுள்ளத்தில் அவள் பதிந்ததை
'நீ எப்படி அறிந்தாய் கண்ணே'' என்று
இன்று அவளைக் கண்ட நான் கேட்டேன்
அதற்கவள் சிரித்தாள், சொன்னாள் 'அன்பே
கண்ணும் கண்ணும் கலந்துவிட்டால் காதல்
காதல் உண்மை என்றால் ஒருவர் மனதில்
ஒருவர் .... பின் கண்ணில் என்ன இதயத்திலும்
எனைத் தேடு அங்கும் நான் இருப்பேன்'என்றாளே அவள்.
இப்போது என் இதயத்திற்குள் அவள்..
ஆம் அவள் குரல் அங்கிருந்து வருவதை
கேட்கின்றேன் நான்...!
மாசிலா உண்மைக் காதலே.....