சித்திரமே சொல்லடி

முழுவதுமாய் விழுந்து போனேன்
முதன்முதலாய் உன்னை
பார்த்த நாளில்...

பார்க்குமிடமெல்லாம்
பாவை நீ தெரிந்தாய்
கண்கள் மூடி தூங்கும் போதும்
கனவிலே வந்து போனாய்
கண்மணிக்குள் பாவை என
கலந்து போனாய் எனக்குள்ளே

எல்லா வழிகளிலும்
வலிகள் மட்டும் தந்தாய்..
கண்கள் தேடி நிற்க,
இதயமது...
துடிக்க மறந்த நாட்கள் அவை.

பிறந்த நாள் அன்றே
இறந்து போன துரதிருஷ்டசாலி தான்
உனக்கான என காதல்.

உன்னை நினைத்தபடியே
ஓட்டுகிறேன் நாட்களை...
நீயில்லையேன்றால் என்ன.??
உனக்கான
என் காதல் போதுமடி.

எழுதியவர் : மருத கருப்பு (19-Aug-20, 3:16 pm)
சேர்த்தது : மருத கருப்பு
Tanglish : sithirame solladi
பார்வை : 213

மேலே