காதலின் பிரிவு
காதல்..
இணைபுரியாத உணர்வு...
ஒருவரை கண்டதும்
வருவது ஒரு காதல்..
புரிந்து கொண்டு வருவது
ஒரு காதல்..
எனக்கும்..
காதல் வந்தது..!!!
அவனை...
புரிந்துகொண்ட பின்பு..
நாட்கள் இனிதாய் சென்றது..
பெற்றோருக்கு தெரியாமல்..
என் காதலும்
வழக்கம் போல்
முடிவிற்கு வந்து விட்டது..
பெற்றோருக்கு தெரிந்த பின்பு...
அவனை மறக்க
அரம்பித்தேன்..
ஆனால்
அவன் மேல் உள்ள
காதலையும் அன்பையும்
மறக்க முடியாமல் தவிக்கிறேன்..
நாட்கள் மட்டும்
நகர்ந்து கொண்டு இருக்கிறது
அவனுடன்
இருந்த நினைவுகளோடு..