உமாதேவி ரவிச்சந்திரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : உமாதேவி ரவிச்சந்திரன் |
இடம் | : காங்கயம் |
பிறந்த தேதி | : 24-May-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 31-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 426 |
புள்ளி | : 34 |
நான் கவிதையில் மிக ஈடுபாடு உடையவள்.
சிற்பிக்குள் இருக்கும்
முத்து போல..
கருவறைக்குள் இருக்கும்
சுவாமி போல..
நீ என்னுள் இருப்பதை
கண்டறிந்த நாள் இன்று..
காதல்..
இணைபுரியாத உணர்வு...
ஒருவரை கண்டதும்
வருவது ஒரு காதல்..
புரிந்து கொண்டு வருவது
ஒரு காதல்..
எனக்கும்..
காதல் வந்தது..!!!
அவனை...
புரிந்துகொண்ட பின்பு..
நாட்கள் இனிதாய் சென்றது..
பெற்றோருக்கு தெரியாமல்..
என் காதலும்
வழக்கம் போல்
முடிவிற்கு வந்து விட்டது..
பெற்றோருக்கு தெரிந்த பின்பு...
அவனை மறக்க
அரம்பித்தேன்..
ஆனால்
அவன் மேல் உள்ள
காதலையும் அன்பையும்
மறக்க முடியாமல் தவிக்கிறேன்..
நாட்கள் மட்டும்
நகர்ந்து கொண்டு இருக்கிறது
அவனுடன்
இருந்த நினைவுகளோடு..
அன்புடன் உணவை கலந்து பரிமாறும்
என் அம்மா,
பாசத்துடன் அறிவுரை கூறும்
என் தந்தை,
சண்டை போட்டாலும் என்னை பாதுகாக்கும்
என் சகோதரர்கள்
இருக்கிறார்கள்..
ஆனால்,
உணர்வையும் பரிமாற
ஒருவர் உண்டு
என்பதையும் கண்டுகொண்டான்,
உன்னை கண்ட பின்பு...
பேசிய
நாட்களை விட,
பேசாத நாட்களில்
மனம் ஏங்குகிறது..
பேசுவதற்காக அல்ல...
தனிமையில்
உன்னுடன் இருந்திட...
இனம் புரியாத
ஒரு சொல், தவிப்பு...
பிரிதல் ஒன்றே
தவிப்பு அல்ல...
இனம் புரியாத மாற்றமும்...
இனம் புரியாத ஏக்கமும்..
இனம் புரியாத காதலும்..
இனம் புரியாத ஏமாற்றமும்,
இனம் புரியாத செயல்களும்,
இனம் புரியாத நட்பும்,
இனம் புரியாத பாசமும்....
தவிப்பே..
என்னை போல்
இனம் புரியாமல் ஏதோ
சொல்ல நினைப்பதே
தவிப்பு....
வாழ்க்கை...
புரியாத புதிரே..
புத்தக பாடத்தை,
படிக்கச் தெரிந்த நமக்கு....
வாழ்க்கை பாடத்தை
படிக்கச் தெரியாமல்
போய் விட்டது...
பல சந்தர்ப்பங்களில்
வாழ்க்கைக்குரிய பதில்கள்...
ஓர் ரகசியமாகவே
காக்கப்படுகிறது...
அதையே போல் தான்..
என் வாழ்விலும்..
நட்பு என்ற ஒன்று..
புரியாத புதிராகவே உள்ளது...
நண்பனை ஒரு படி மேல
வைக்கும் பொழுதும்..
காதலுக்கு ஒரு படி கீழாய்
வைக்க முயன்ற பொழுதும்...
தோழா...
வாழ்வின் பாதையில்
ஒற்றையாய் என்
கால்களும் மனமும்
நகர்ந்தது...
ஒற்றை பாதையில்
இரவில் இழந்த
ஒளியை போல் தவித்தேன்
ஒற்றையாய்..
இரவில் மின்னும்
நட்சத்திரங்களை போல்...
பளிச்சிடும்
நிலவை போல்...
என் வாழ்வில்
பிரகாசிக்கும்
வெளிச்சமாய் வந்தாய்...
என்றும் இரவிலும்
வெளிச்சம் தர...
காதலில் விழுந்தேன்...
உன் அழகை கண்டு
அல்ல...
காதலில் விழுந்தேன்...
உன் சொத்தை
பார்த்து அல்ல...
காதலில் விழுந்தேன்...
உன் மேல் விழுந்த
அனுதாபங்களால் அல்ல...
காதலில் விழுந்தேன்...
உன் சிரிப்பின் அழகை
ரசித்ததால்...
உன் பார்வையை
மறக்க முடியாமல்..
காதலில் விழுந்தேன்...
உன் மனதை
யாருக்கும் விட்டு கொடுக்கும்
மனம் இல்லாததால்...
காதலில் விழுந்தேன்...
உன் திறமையை கண்டு...
காதலில் விழுந்தேன்...
கனவுகளில் வாழ்கிறான்..
என்றும் உன்னை விட்டு
அகலாமல்...
மறக்க மனம் இல்லாமல்...
உன்னோடு என்றும் உன்
மனைவியாய்...
காதலில் விழுந்தேன்...
உன் அழகை கண்டு
அல்ல...
காதலில் விழுந்தேன்...
உன் சொத்தை
பார்த்து அல்ல...
காதலில் விழுந்தேன்...
உன் மேல் விழுந்த
அனுதாபங்களால் அல்ல...
காதலில் விழுந்தேன்...
உன் சிரிப்பின் அழகை
ரசித்ததால்...
உன் பார்வையை
மறக்க முடியாமல்..
காதலில் விழுந்தேன்...
உன் மனதை
யாருக்கும் விட்டு கொடுக்கும்
மனம் இல்லாததால்...
காதலில் விழுந்தேன்...
உன் திறமையை கண்டு...
காதலில் விழுந்தேன்...
கனவுகளில் வாழ்கிறான்..
என்றும் உன்னை விட்டு
அகலாமல்...
மறக்க மனம் இல்லாமல்...
உன்னோடு என்றும் உன்
மனைவியாய்...
பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்
உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை
2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!
3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...
அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...
4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ
முதல் படைப்பு
வெள்ளைத்தாளில் என் கைபட எழுதிய
கவிதையை படித்து விட்டு "கவிதை வரிகள் " எல்லாம்
அழகாய் இருக்கிறது என்று அதில் "முத்தமிட்டு " தந்தாயே ..!!!
உன் "இதழ் வரிகள் "கூடத்தான் அழகாய் இருக்கிறது
நான் என்ன செய்யட்டும் !!!