தோழன்
தோழா...
வாழ்வின் பாதையில்
ஒற்றையாய் என்
கால்களும் மனமும்
நகர்ந்தது...
ஒற்றை பாதையில்
இரவில் இழந்த
ஒளியை போல் தவித்தேன்
ஒற்றையாய்..
இரவில் மின்னும்
நட்சத்திரங்களை போல்...
பளிச்சிடும்
நிலவை போல்...
என் வாழ்வில்
பிரகாசிக்கும்
வெளிச்சமாய் வந்தாய்...
என்றும் இரவிலும்
வெளிச்சம் தர...