தகப்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்து

நொடிகள் நிமிடமாய்
நிமிடங்கள் நேரமாய்
நேரம் நாட்கலாய்
நாட்கள் வாரங்களாய்
வாரங்கள் மாதமாய்
மாதம் வருடமாய்
வருடங்கள் தசாப்தமாய்
தசாப்தம் ஆறைக் கடந்து
இன்றும்
வாழ்க்கையென்னும் ஆற்றை கடக்க
தோனியாய் பயனித்து
தான் மூழ்கினும்
என்னை தத்தளிக்க விடாமல்
தாங்கிப் பிடித்த தந்தைக்கு
தமிழை எனக்கு அறிமுகம்
செய்த தகப்பனுக்கு
தமிழில் ஓர்
பிறந்த நாள் வாழ்த்து

எழுதியவர் : காவேரி நாதன் (24-Aug-20, 2:19 pm)
பார்வை : 37

மேலே