நடனம் ஆடுகிறேன்
மானாக மயிலாக
மங்கை அவள்
மேடையில் நடனமாடா...!
என் கண்களிரண்டும்
அவளது மேனியின்
எழில் கண்டு நடனமாடா...! !
என் மனமோ
நிலையில்லாமல்
தள்ளாடா...! !
ரசிகனாக நடனம் பார்க்க
சென்றவன் அவளின்
காதலனாக மாறி
பின்னர்...இருவரும்
நீ பாதி நான் பாதியாக மாறி
இப்போது அவளின்
தாளத்திற்கு
தினமும் நான்
நடனம் ஆடுகிறேன்...! !
--கோவை சுபா