மழலை புன்னகை

குட்டி குட்டி கவிதைகள் எழுத வந்தேன்.. குட்டி குட்டி மழலையின் சிரிப்பில்..
குட்டி குட்டி கவிதைகள் சொல்ல வந்தேன்..
குட்டி குட்டி மழலையின் நடையில்..
இதழெல்லாம் புன்னகையோ..!
கள்ளமற்ற பார்வையோ..!
ரசிப்பதற்கு இருகண்கள் போதுமா..
இறைவா இன்னொரு கண்கொடு.!
நான் பெற்ற என் மழலையின் சிரிப்பை காண..
ஆயுளெல்லாம்.!!