மிதிவண்டி
மிதிவண்டிக்கு...
மூச்சு காற்று நிரம்பிய உனக்கு மூச்சு வாங்குவதே இல்லை
சங்கிலி தொடர் சக்கரங்களுக்கு
சலிப்பு தட்டுவதே இல்லை
இடி தாங்குவது கூட இயல்பு
மிதி வாங்கும் நீ உயர்வு
சாலைக்கு நீ மட்டுமே சாரதியாகிறாய்!
உழைத்து முன்னேறுவது போல்
உன்னை உதைத்து முன்னேற்றம் பலருக்கு
உட்கார இடம் கொடுத்த உன்னை உதைப்பது ஏனோ?
உன்னுடலமைப்பு ஏழ்மையில் திகழ்வதால் தானோ?
ஆளில்லா சாலையில் அரவணைப்பாய் உன்னுரசல் ஓசை
புலவனுக்கெல்லாம் உன் இருக்கையே எழுதும் மேசை
உன்மீது மட்டும் எனக்கு தனிப்பட்ட ஒரு ஆசை...
பெட்ரோல் டீசல் குடிக்கும் குடிகாரனில்லை
காப்பீடு உரிமத்தில் நீ வாழ்வதில்லை
தலைகவசத்தை எண்ணி உன் தலைமுறை தவித்ததில்லை
உந்தன் மணி ஓசைக்கு மயங்காத மானிடரில்லை
சின்னஞ்சிறு குழந்தைகள் ஒருநாளும் உன்னை மறப்பதில்லை...
நீ இறப்பதில்லை...
- ஜாக்