நிரந்தர பேரழகி
நிலாவையும் நீ நிலைகுலையச் செய்தாய்
நிரம்பிய உன் நிரந்தர பேரழகால்
கன்னங்களிரண்டுமே கவர்ச்சிக் கிண்ணங்கள்
கண்களோ காந்தமாய் காண்போரை கவரும் ஆயுதம்
மூங்கின் பேரழகோ முப்பது நாட்களையும் குளிராக்கும்
முகவாயின் சிவப்போ எழுப்பிறப்பை எடுக்கத் தூண்டும்
நெற்றியின் நீள் பிம்பம் நிம்மதியை இழக்க வைக்கும்
அருகில் நீ இருந்தால் அனைத்துமே அமிழ்தமாகும்
சுட்டி நீ சொன்னால் சுடர் கூட ஆயுதமேந்தும்
பஞ்சு உடல் படைத்த அஞ்சுகக் கூட்ட அரசியே
என் நெஞ்சினுள் புகுந்து என்னை ஆட்சி செய்.
- - - - - - -நன்னாடன்.

