எனக்கு கிடைத்த காதல் பரிசுகள்

கண்ணுக்குள் வைத்து முத்தாய் பார்த்ததால்
கண்ணீர் மட்டுமே கொடுத்து சென்றாய்
அன்பை உன்னிடம் மட்டுமே காட்டியதால்
இன்று என்னை அனாதையாகிசென்றாய்
பொத்தி பொத்தி பாதுக்காத்ததால்
உள்ளத்தில் பொதி சுமக்க செய்தாய்
தனிமையில் இருக்க விடமால் பார்த்து கொண்டதால்
எனக்கு தனிமையை மட்டுமே பரிசாக கொடுத்து சென்றாய்
உனக்கு தலைவலி என்றாலும் தவித்து போனதால்
என் தலையில் இடியை இறக்கிசென்றாய்
உன்னிடம் உன்மையாய் இருந்ததால் என்னை ஊமையாகி சென்றாய்
உயிராய் நேசித்தேன் உயிரையே எடுத்து சென்றாய்.