ஆசிரியர்

அன்பில் அன்னையாக
ஆரவணைப்பில் தந்தையாக
அன்று நீ கற்பித்த பாடங்கள்
இன்றும் என் மனதில்
மதிப்பையும் மகிழ்ச்சியையும்
தந்திருக்கிறது
நீவிர் கற்பித்த பாடங்கள் வெறும்
பாகங்கள் அல்ல
என் வாழ்க்கையின் பாலங்கள்
மற்ற பிள்ளையைப்
பெற்ற பிள்ளையாக நினைக்கும்
பெற்றோர்க்கு
எனது

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : ஜோவி (5-Sep-20, 9:40 am)
சேர்த்தது : ஜோவி
Tanglish : aasiriyar
பார்வை : 6869

மேலே