அதிகமான வட்டியில்
வருமானத்தைக் கொண்டு வாழ்ந்திட பழகு
வருமானத்தை மிகுந்து கடன் பட எண்ணின்
தன்மானம் தெருவில் தாண்டவம் ஆடும்
கடன்பட நேரும் கடுமை சூழல் வந்தால்
அடமானம் வைத்து கடன் தனைத் தேடு
அளவுக்கு அதிகமான வட்டியில் வாங்கின்
அந்தரத்தில் ஆடும் இலவமாய் மாறுவாய்
கொள்ளைக் கூட்டம் கொடுக்குது கடனை
கொடுக்கும் ஒப்பந்த கூறுகளை ஆய்ந்து
கூரிய கண்ணால் மேவியும் பார்த்து
அதற்குப் பின்னே அத்தாளில் ஒப்பமிட்டால்
அடர் துன்பம் வருவதை ஆரம்பத்தில் தடுக்கலாம்.
------ நன்னாடன்.