குமுறும் நெஞ்சங்கள்
இரக்கமற்ற மனிதனே
உன் இயலாமையின் வடிவமே
அரக்க குணமாகியது
பண்புள்ள மக்களை
படு குழிக்குள் தள்ளினாய்
பாவி நீ கம்பளத்தில் ....
நிறமிழந்து, நிலமிழந்து, நிற்கதியில்
இனமொன்று தவிக்கிறது .
எங்கிருந்தும் இனமொன்றின்
ஈனக்குரல் கேட்கிறதே
மீண்டும் நீ மனிதனாய்
எப்படித்தான் முடிகிறது உன்னால்
வெட்கம் துக்கம் மானம்
தடுக்கவில்லையே உன்னை/
அரக்கனை அரவணைத்த கைகளுக்கு
இரக்கத்தை அணைத்திட இயலாது
நினைக்கும் போதெல்லாம்
கொதிக்கிறது நெஞ்சம் வேதனையில் ,