எங்கள் ஆசானுக்கு வந்தனம்
எண்ணும் எழுத்தும்
எங்களுக்கு கற்று கொடுத்து
உங்கள் வாழ்க்கையை
எங்களுக்கு அர்ப்பணித்து
எங்கள் வாழ்க்கையில்
ஒளி ஏற்றிய ஒளிவிளக்கே..!!
இந்த உலகில் எந்தயொரு
மாற்றத்தையும் உருவாக்குவது
ஆசிரியர்கள் நீங்கள்தான்
வகுப்பறையில் கரும்பலகையில்
மாணவர்களின் எதிர்காலத்துக்கு
புள்ளிவைத்து வெளிச்சம்
காணவைத்த உங்களுக்கு
எங்கள் முதல் வந்தனம்..!!
கல்லும் உடையாமல்
சிலையும் சிதறாமல்
எங்களை செதுக்கி
இந்த மண்ணுலகில்
சிறந்த மனிதனாக
திகழ்வதற்கு நற்போதனை கலந்த
சிறந்த கல்வி அறிவை கற்பித்த
ஆசிரியர்களுக்கு வந்தனம்...!!
உங்களை எத்தனை கேலிகள்
கிண்டல்கள் செய்தோம்..!!
இன்று நினைத்து
மனதுக்குள் அழுகின்றோம்
மன்னிப்பும் கோருகின்றோம்
உங்கள் அருமை பெருமையை
ஆசிரியர் தினமான இன்று
நினைத்து பார்த்து
உங்களுக்கு நன்றியும்
கோடான கோடி வந்தனங்கள்
சிரம் தாழ்த்தி கரம் கூப்பி
தெரிவித்துக்கொள்கிறோம்...!!
--கோவை சுபா