பள்ளி தோழர்கள் சந்திப்பு
-----------------------
மூபத்தாண்டு முன்பு
முகமறிந்தும் அறியாமலும்
விதைத்த நட்பு...
மூளையின் மூலையில்
ஒதுங்கிய சிறுசிறு
பெயர் நினைவுகளுடன்
முளை விட்ட நட்பு..
கலங்கடித்த கஜா புயலால்
கரையோர மக்களை நாடி
கை கோர்த்த நட்பு..
பூலோக இருப்பிடம் பிரிப்பினும்
கதிரவன் கண் அயர்ந்தாலும்
புலனத்தில் புதுப்பித்த நட்பு..
இடையூறுகள் சில வந்தும்
இறுக்கம் அதிகமான
இனம் புரியா நட்பு..
பள்ளி நினைவலைகளை
பலர் மனது குளிர
பாங்காய் பகிரும் நட்பு..
பலர் கண் பட்டாலும்
பல ஆண்டு பசுமையாய்தொடர
மும்மத தெய்வங்களிடம்
முழு மனதுடன் வேண்டுகிறேன்..
-----------------++
சாம்.சரவணன்