ஆத்மாவின் அலறல்

இருப்போம் என்று எண்ணியே எல்லா தவறையும் செய்தேனே
தவறை திருத்த உகந்த நேரம் கிடைக்கும் என்றே நினைத்தேனே
தவறால் இன்பம் பெருகிடவே தடையின்றி அவற்றை செய்தேனே
தடுத்தவர் குடும்ப சொத்துக்களை தாறுமாறாய் தினம் சிதைத்தேனே
அடுத்தவர் அதைக் கண்டு அஞ்சியதை அழகாய் நானும் இரசித்தேனே
பிறப்பே இதற்கென எண்ணிய வேளையில் பிரிவு ஒன்றை சந்தித்தேனே
பிரிவால் பலவற்றை இழந்தபோது பலரின் வேதனை அறிந்தேனே
செய்த தவறுக்கு தண்டனையாக குடும்பத்தோடு விபத்தில் மாண்டேனே
புல்லுக்கு இறைத்த பாவ நீரால் பல நெல்லுக்கள் அழுகி நாசமாச்சே.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Sep-20, 1:56 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : aathmaavin alaral
பார்வை : 3913

மேலே