நம் காதல் அழகியல்

உனைக் காணாது காண்பது அழகு
உன் குரல் கேளாது கேட்பது அழகு
நீ பேசாது பேசும் வார்த்தைகள் அழகு
உன் சுவாசம் உணாரது உணருதல் அழகு
தீண்டாத தீண்டல்கள் அழகு
நீ எனை நினைக்கும் தருணங்கள் அழகு
உன் தோள் மீது சாய்ந்து
பேசாது பேசும் நினைவுகள் அழகு
நீ கொடுக்காது போன முத்தங்கள் அழகு
மொத்தத்தில் நம் காதல் பேரழகு

எழுதியவர் : நிலா (8-Sep-20, 5:58 pm)
சேர்த்தது : Devan
பார்வை : 125

மேலே