அவள்
பெண்ணே நீ என்ன
ஓவியன் வடித்த சித்திரப்பாவையா
இல்லை சிற்பி செதுக்கிய பொற்சிலையா
இல்லை இல்லை அன்னம்போல நடந்துவரும்
நீ அழகு மங்கைதான் , நீ துள்ளி வருகின்றாய்
புள்ளி மானாய் நெருங்கி உன்னைக்காணும்போது
ஆடும் மயிலாய் காட்சி தரும் நீ
காமன் காட்சிக்கு வைத்த தேவதையோ
இல்லை பிரமன் படைத்த பெண்ணரசியோ
இல்லை உயிர்கொண்டு எழுந்த
கவிதையோ காவியமோ இன்னும்
எப்படித்தான் வருணிப்பேன் உன்னை
ஆரணங்கே தெரியலையே