இந்து புத்த சமண மதங்கள்

இந்து புத்தம் சமணம்


பாரதத்தில் மக்கள் இறைவனை என்றைக்கு நினைக்கத்துவங்கினார்களோ அன்று
தோன்றியதுதான் இந்துமதம்.ஆறு சமயங்கள் சேர்ந்ததே இந்து மதம். ஒருவன் ஏதோ
ஒருகடவுளை வணங்குகிறான் என்றால் அது அவனது சுதந்திரம் அதனை. அதில்
யாரொருவனும் தரம் தாழ்த்தி கருத்து சொல்வது கண்டிக்கத்தக்கது.

பகுத்தறிவாளர்கள் கட்சி அறிவாளிகள் யாரும் சேர்ந்து ஆரம்பித்த்ததில்லை. பகுத்தறி
வாளர் யாரும் உண்டியல் குலுக்கு வார்களா, பிச்சை எடுத்து வளர்வார்களா.? பிச்சை
எடுத்தவர்களின் இன்றைய சொத்து விவரங்கள் என்ன? தமிழ்நாட்டின் பெரும் பணக்காரர்
களாக மாறியுள்ளார்கள். அந்த பணத்தில் பல இளவட்டங்களுக்கு பேட்டாக் காசு
கொடுத்து எல்லோரையும் தரக்குறைவாக பிரதமர், ஜனாதிபதி மத்திய மந்திரிகள்,
மற்ற எல்லா அரசியல் வாதிகளையும் அசிங்க அருவருப்பாக தரக்குறைவாக பேசும்
கும்பலாக மாறியிருக்கிறார். பிச்சை போடுபவர்களின் எஜமானர்களாகி அவர்களை
ஏமாற்றி வளர்ந்து பின்பு இன்று மந்திரிகளாகி எல்லோரையுமே ஆள்கிறார்கள்.
தொடர்ந்து அவர்களுக்குள்ளேயே பட்டம் சூட்டிக்கொள்வதும், அதை மக்கள் மத்தியில்
பரப்புவதுமாக இப்படியே சுமார் 80 வருடங்களாக மக்களை ஏமாற்றியே தங்கள்
வாழ்க்கையை உயர்த்திக் கொண்டுள்ளார்கள். வாய்பேச்சால் பேசியே மக்களை
மூளைச் சலவை செய்து ஏமாற்றி விட்டார்கள்.அந்த மக்களை குதிரைக்கு கடிவாளம்
போட்டதுபோல் அவர்கள் விரும்பிய திசையில்அழைத்து செல்கிறார்கள்..

உதாரணத்துக்கு முருகன் இந்து இல்லை என்கிறான்.. அதைப்பற்றி இவனுக்கு என்னக்
கவலை ? முருகனைத் தொழுகிறேன் அல்லது தொழமாட்டேன் என்று கூட சொல்லாது
முருகன் இந்து இல்லைத்தமிழன் என்கிறான். காலகாலமாக ஆயிரத்தெட்டு கடவுளர்
களைப் பெயர் சொல்லி இனம் கண்டவர்கள் இந்துத் தமிழர்கள். க டவுளில் தமிழன்
என்றும் ஆந்திர கடவுளென்றும் யாரும் பிரித்ததில்லை. இந்த முட்டாளுக்கு வீடியோ
போட வசதி வாய்ப்பு இருப்பதால் கண்டதையும் மக்களிடம் பேசி கலாச்சாரத்தைக்
கொல்கிறது இவர்களுக்கு வாடிக்கையாகிப் போனது. இவனுக்கு பதில் சொல்லா
விட்டால் தலை வெடிக்கும் குழப்பம் ஏற்படும். அதைத்தான் இவர்களும் செய்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்தால் மனிதன் பைத்தியமாகிப் போவான்.
ஒருவன் சிவன் இலங்கையில் கல்லால மரத்தின் கீழே வசித்தான் என்கிறான்
சிவனென்ன பழங்குடி மனிதனா முட்டாளே கடவுளடா. !! எப்படியெல்லாம் இந்து
மதத்தை சாகடித்து பிறமதங்களை வளர்க்க சிலதுரோகிகளின் கும்பல்கள் தமிழ்
நாட்டில் உள்ளடி வேலை செய்கிறது.




நம்முடைய இந்துமதம். காலத்தால் கணக்கிட முடியாத ஒரு பழம்பெரும் மதமாகும்.
அதில் சைவம் வைணவம் என இருபெரும் சமயமாக இந்துமதம் பிரிந்தே இருந்தது.
ஆயினும் வைணவர் எல்லோரும் மகாதேவனையே பரம்பொருளாக ஏற்றுக்
கொண்டுள்ளார்கள் இதற்கு இதிகாசங்கள் புராணங்கள் என்று பலச் சான்றுகள்
உள்ளன. இருப்பினும் திருமாலைத் தொழுபவர் அடாவடியாய் திருமாலே பரம்பொருள்
என்பர். ஆனால் திருமாலின் அவதாரப் புருஷன் ராமன் இராமேஸ்வரத்தில் லிங்கம்
செய்வித்து வழிபட்டான் என்று அவர்களேக் காலட்சேபம் செய்வார்கள். அர்ச்சுனனைக்
கண்ணன் சிவனிடம் சிவதனுசை வாங்கத் தவம் மேற்கொள்ளும்படி இமையத்திற்கு
அனுப்பினான் என்று அவர்களே சொல்வார்கள்..

பிற்காலத்தில் இந்த இருசமயங்ளுக்குப் பின்னே இந்துமத உட்பிரிவான சமயங்கள்
ஆறு என்று கணக்கிட்டார்கள்.. அவைகள் முறையே சைவம் (சிவ) வைணவம்
(திருமால்) கௌமாரம் (முருகன்) காணாபத்யம் (கணபதி) சாக்தம் (துர்கை) செளரம் (சூரிய)
வழிபாடு களெனப் பிரித்தனர். ஆனால் இந்த அறுவகை சமயத்தினரும் எல்லோருமே
சூரியனைக் காலையில் தொழுவதை சகஜமாகக் காணலாம். முருகனுக்கும் கணேசனுக்கும்
அம்மான் திருமால் அம்மையும் அப்பனும் சிவசக்தி என ஒன்றொன்றுக்கும் தொடர்பு
படுத்தித் தொழுவார்கள். இந்துமதக் கடவுளர்களின் பெயர்களால் இந்த இந்து மதத்தை
பிரிக்க நினைப்பவன் பிற மதத்தாரின் கைக்கூலி களே. இவனுக்கு மதத்தை புன் படுத்தும்
வேலையை யார் கொடுத்தார்கள். ஒரு மதத்தை கண்டவனும் சகட்டுமேனிக்கு அக்கக்காக பிரித்து ப்பொய் கருத்து பரப்புவனை தட்டிக் கேட்காத அரசாங்கம் தமிழ் நாட்டிற்குத் தேவையா?
ஒருவழக்கையும் இவர்கள் மீது அரசு போடாதாததேன் ? காரணம் இது உதவாக்கரை
பகுத்தறிவு பகல வனின் பாதையில் செல்கிராதாம். மற்றவர்களுக் கில்லாதப் பகுத்தறிவை
இந்த நூற்றாண்டில் இவர்கள் எப்படிப் பெற்றார்கள். படிக்காதவனா அவன்தான் இங்குப்
பகுத்தறிவாளர்.
அறுவகைச் சமயங்கள் ஒன்று சேர்ந்ததே ஒருமதம். அதுவே இந்துமதமாமென்றனர்
மதம் என்றதின் உட்பிரிவே சமயங்கள். அதையெல்லாம் மதமாக்கல் முட்டாள்தனம்.

சமணமும் புத்தமும் ஏறக்குறைய சமகாலத்தியது என்பதையும் அறிவோம். சுமார்
இரண்டாயிரத்து முன் நூறு ஆண்டுகளுக்கு முன் புத்தரால் ஒன்றும் தீர்த்தங்கரரால்
சமணம் என்ற ஒன்றும் இங்கே ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரண்டு மதங்களும் மக்கள்
விரும்பி ஏற்றுக்கொண்ட மதங்கள் கிடையாது. காரணம் விகடகவி என்பதைத் திருப்பிப்
படிக்க அதுவும் விகடகவி என்றே சொல்லும். வித்தியாசம் ஒன்றும் கிடையாது.
சமணர்கள் வள்ளுவரின் குறளின் புகழைத் தோற்கச்செய்ய நாலடியார் என்ற
நீதி நூலையும். இராமாயண மகபாரதக் கதைகளைத் தோற்கடிக்க சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம் மணிமேகலை மற்றும் பல நூல்களை எழுதிக்குவித்தார்கள்..

புத்தம் பாரதத்தில் அவ்வளவாகத் தழைத்தோங்க விடவில்லை.. காரணம் புத்தரேக்
கடவுள் என்ற ஒரு பிம்பத்தை வெளிப்படுத்த அதுயிங்கு எடுபடாது துரத்தியடிக்கப்
பட்டதாக. அகத்திய மாமுனியானவர் தன்னுடைய ஞானக்காவியம் 1500 என்னும்
நூலில் விளக்கியுள்ளார். ஆகையால் அது சீனத்திற்கு துரத்தப்பட்டதாகவும் குறிப்,
பிட்டுள்ளார். ஆயினும் தமிழரால் தாரைவார்த்து கொடுக்கப்பட்ட இலங்கையில்
மட்டும் புத்தம் ஒட்டிக்கொண்டு படர்ந்து செழித்து வளர்ந்துள்ளது. ஆகவேதான்
இன்றும் இலங்கைக் கலவர பூமியாக தொடர்ந்து இருந்துவருகிறது.

புத்தம் அசோகனால் அவனது பெரிய சாம்ராஜ்யம் முழுமையிலும் ஏற்றுக்கொள்ளப்
பட்டது.. காரணம் அசோகன் இந்துக்கோவில்களைச் சார்த்த மடங்களையெல்லாம் புத்த
மடங்களாக மாற்றி புத்த சமயத்தை வளர்த்தான் புத்த மதத்தை தழுவலைக் கட்டாய
மாக்கினான். மக்கள் யாரும் புத்த மதத்தின் கோட்பாடுகளை அறிந்திலர். புத்த மதத்தை
கஷ்டப்படாமல் பரப்பினார்கள். அதனால் விரைவில் மறைந்துபோனது.

இதேபோல சமணர்களும் பிரசங்கம் செய்தோ அல்லது அதில் உள்ள கருத்துக்களுக் காகவோ
சமணம் வளரவில்லை. அரசர்களை சமணர்கள் சாமர்த்தியமாக சமத்தைத்தி தழுவச்சொல்லி
அப்படியே சுகமாக மக்களை மதம் மாற்றிவிட்டார் கள்.
சமண மதமும் இந்தியாவெங்கும் சமணர்கள் மன்னர்களைக்
கவர்ந்து சமணம் பரப்பப் பட்டது.என்பதை எந்த இந்துவும் எளிதில் புரிந்துகொள்வான்
இந்த இரண்டு புத்தம் சமணம் மதங்கள் இந்திய மன்னர்களின் கெடுபிடியினாலே
மக்கள் தொழும் நிலையேற்பட்டது என்றுகூட சொல்லலாம். புத்த சமண மதங்களை மக்கள்
யாரும் விரும்பி ஏற்றுக் கொண்ட மதங்கள் கிடையாது. பட்டித்தொட்டி களெங்கும் புத்த
சமண சிலைகளை நிறுவிக் கட்டாய வழிபாடாக்கி மக்களைத் துன்புறுத்தி யிருக்கிறார்கள்.
சைவ வைணவ மடங்கள் புத்த சமணர்களின் கையில் சென்றுள்ளது. அவர்கள் அதை
மாற்றியமைத்து அதிகாரம் செலுத்தி அசையும் அசையா நிலம் கட்டடங்களைக் கையகப்
படுத்தி சென்றுள்ளார்கள்.

(தமிழ்நாட்டிலும் அதேத்தான் இப்போது நடக்கிறது. திராவிட நாடென்றான். பிறகு கடவுள்
இல்லையென்றா்ன். பிறகு இசுலாம் கிருத்துவ மதத்தாரைக் கட்டித் தழுவி இந்துக்களை
ஒழிக்க அரும்பாடு படுகிறான்.)

இந்துக்களின் சத்திரம் சாவடிகள் எல்லாம் புத்த மடங்களாகவும் சமணவிகாரங்களாக
வும் மாறிப் போயின என்பதே உண்மை. இந்துமதத்தை அடுத்துக் கெடுத்த மதங்களே
பௌத்தமும் சமணமும். இன்றுபோலவே அன்றும் மன்னர்களின் அடக்கு முறையால்
இந்து மதத்தை அழித்து அதன்மேல் உட்கார்ந்து அவர்களின் மதத்தை வளர்த்தார்கள்..i

சமணமும் பௌத்தமும சைவ சமண மதங்களைக் கண்காணித்து அதை வேருடன்,
பூண்டோடறுத்தழித்துக் கோலோச்சி வந்தார்கள். இப்படி இவர்களின் அராஜகங்களால்
சைவ சமண மற்றும் அறுவகைக் கோயில்களும் தொழுகை நடத்தாது மூடப்பட்டன.
கி.பி.7ஆம் நூற்றாண்டில் ஆந்திரப் பல்லவர்கள் காஞ்சியைக் கைப்பற்றிப்
பின் சோழமண்டலத் தையுங்கையகப் படுத்தி ஆண்டார்கள். அவர்கள் காலத்தில்
சைவத்துடன் வைணவமும் போற்றப்பட்டு இரண்டும் துளிர்த்தது. புத்தமும் சமணமும்
பட்டுப்போனது. முன்னேஅழிக்கப்பட்ட சைவ வைணவ மடங்களும் பள்ளிகளும்
மீண்டும் அதே இடத்தில் புதுப்பிக்கப்பட்டு துளிர்த்துப் பின் தழைத்தது.

முன்னே சைவ வைணவக் கோயில் மற்றும் மடங்களை இடித்து புத்த சமண மடங்கள்
ஏற்படுத்தியதை மறைத்துவிட்டு அதன் பிறகு மீண்டும் வைணவ சமணம் வளர்ந்தபோது
நிகழ்ந்த நிகழ்வை மிகையாக்கி பேசும் தரம் தாழ்ந்த அரசியல் வாதிகளை முட்டாள்கள்
என்பதா? ஞான சூண்யங்கள் என்பதா. மத விஷயத்தில் அரசியல் கொள்ளையர்கள்
தலையிடுவதேன். காரணம் தமிழ்நாட்டில் சமணர்களை கழுவேற்றிய சுந்தரப் பாண்டியன்
இல்லையென்ற தைரியம் தான் காரணம்..

பாண்டியநாடு மட்டும் கூன் பாண்டியெனும் சுந்தர பாண்டியனின் முன்னோர்கள் காலத்
திலிருந்து சமண மதம் மேலோங்கியிருந்தது. அந்த சமயத்தில்தான் இருபெரும் சிவனடி
யார்களாம் திரு ஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் இருவரும் புகழுடன் தமிழ் நாட்டில் வலம்
வந்துகொண்டிருந்தனர்.. திருநாவுக்கரசர் முதலில் சமணராக இருந்தவர் தன்னுடைய
தமக்கைக் சிவபெருமானை நினைத்து வேண்டலினால் துன்பம் அடைந்து சைவமதம் தழுவினார்.
இதேபோல் சுந்தர பாண்டியனின் தீராக்காச நோயினால் அவதியுற்று சாவின் விளிம்பில் இருந்தான்.
சமணர்கள் என்னென்னவோ செய்தும் மன்னனின் நிலைமை மோசமாகியதேத் தவிற
உடல் முன்னேறவில்லை. பிரார்த்தனைகளும் வைத்திய மருந்துகளும் பலனளிக்கவில்லை.
அவனது மனைவி மங்கையக்கரசி சோழநாட்டின் இளவரசி.. அவள் தன் தந்தையிடம்
வேண்டுதல் விடுத்து திரு ஞானசம்பந்தரை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தாள்.
அதன்படியே திரு ஞானசம்பந்தர் பாண்டியநாடு சென்று பாண்டியனின் வாயில்
கங்காளனின் திருநீற்றை கொஞ்சம் போட்டு அவன் உடம்பில் அதையேத் தளரப்பூசிடப்
பாண்டியன் இரண்டே நாளில் குணமடைந்து அதிசயித்தானாம். சமண மதத்தில் உண்மை
யில்லை யென்று முடிபு செய்து மதுரையில் சுமார் 8000 சமணர்களையும் கழுவிலேற்றிக்
கொன்று போட்டானாம்..பாண்டிய நாட்டைவிட்டே சமணர்கள் நெற்றியில் விபூதியை
அணிந்துகொண்டு எங்கெங்கும் ஒடித்தப்பித்தனர். அன்றையப் பொய்யர்களின்
கதி சாவுதான்.அப்படி மாமன்னர்கள் இன்று இருந்தால் பொய் அரசியல் வாதிகளின் கதி யென்ன
வாகியிருக்கும் என்று யோசியுங்கள்.. அன்றையப் பொய் மதமான சமணர்களை அரசன்
கொன்றான். இன்றைய முட்டாள்கள் அதற்கும் இன்று நீதி விசாரணை வேண்டும் என்பது
போலப் பேசிவருகிறார்கள். சாமியில்லை என்கிறப் பகுத்தறிவாளர்கள் பாண்டியன்
சமணர்களைக் கொன்றது அநியாயம் என்கிறார்கள் இவனென்ன மக்களின் வழிகாட்டியா ?
கொள்ளையர்கள். இவர்களுக்குக் கெதற்கு இந்த ஆகாத , வேண்டாத நரித்தன வேலை.

இந்த சமயத்தில்தாம் சிவனடியார்களான ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் வந்து சாவின்
விளிம்பில் இருந்த சைவசிவ மத்ததை புதுப்பித்து வழிபாட்டை தூக்கி நிறுத்தினர் .
கிராமம் கிராமமாக கால்நடையாகவே ஊர் ஊராய் சென்று பழையக் கோயில்ககளை
யெல்லாம் திறந்து திருப்பணிகள் நடக்க ஏற்பாடுகளை மேற்கொண்டனர். . அரும்பாடு பட்டு
சைவத்தையும் வைணவத்தையும் தமிழ்நாட்டில் நிலை நிறுத்தினார்கள்.

சிறு வயது பாலகனான ஞானசம்பந்தர் தேவாரத்தில் மூன்று திருமுறைகளை அவரே எழுதி
யுள்ளார். மீத முள்ள திருமுறைகளை நாவுக்கரசர் சுந்தரரும் எழுதியுள்ளார்கள்
திருஞான சம்பந்தர் எழுதிய மூன்று திருமுறைகளில் சுமார் 380 பதிகங்களில்
ஒவ்வொரு பதிகங்களிலும் 10 வது அல்லது பதினோராவது பாடலில் தவறாது சமண
பௌத்த மதத்தினரின் செயல்களைத் தாழ்த்திப் பாடியிருக்கிறார். இப்படி 3800
பாடல்களில் சுமார் 380 பாடல்களில் சமண பௌத்தர் களை தவறாது இழிவு பட
பாடியிருக்கிறார். இந்தப் பாடல்களை பாடும் சமயம் ஞான சம்பந்தருக்கு வயது
9 அல்லது 10 கூட இருக்காது. அந்த சிறியவயதில் சமணத்தாலும் பௌத்தத்தாலும்
ஞான சம்பந்தரின் மனம் எப்படி புண்பட்டிருக்கிறது என்பதை இந்த 380 பாடல்களால்
அறியமுடிகிறது. மாதிரிக்கு சுமார் 10 பாடல்களை இங்கே த் தரப்பட்டுள்ளது.
அதன் விளக்கமும் போட்டிருப்பதை பாருங்கள்




கோது சாற்றித் திரிவா ரமண்குண்டர்
ஓது மோத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே. (1)

நெஞ்சே! குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவராகிய சமண்
குண்டர்கள் ஓதுகின்ற வேதத்தை அறிய முயலாது, சிவாகம நெறி நின்று,
நினைப்பவர் கருதும் திருவுருவோடு வெளிப்பட்டருளும் முதல்வனாகிய
சிவபிரானது சோற்றுத்துறையை நாம் சென்றடைவோம்.

மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா வென்ன நில்லா விடர்களே. ,(2)


அழுக்கேறிய உடலினராகிய சமணரும், மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித்
திரிபவர்களாகிய புத்தரும் பேசக்கூடாதவைகளைப் பேசித்திரிய அன்பர்கள்
`ஒளி பொருந்திய செம்பொன்பள்ளியில் மேவிய ஈசா!` என்று கூற அவர்களுடைய
இடர்கள் பலவும் நில்லா.

நீச ரெம்மை சுற்றி யிருநதிட
தேச மக்கள் முன்னே றமுடியா
பேசும் பேச்சால் ஆகார் தமிழரும்
ஈசன் புகழைப் பேசத் தமிழரே. (3)
_


வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே. (4)


உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத்
தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர்
ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள்

மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்
இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்
பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே. (5)

மயக்க உணர்வுடையவரும், பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக்
கையின்கண் ஏந்தியவரும், நற் குணங்கள் இல்லாதவர்களும் ஆகிய சமணர்,
புத்தர்கள் நிற்கத் தன்னை வழிபடும் அன்பர்கட்கு வினைவயத்தாற் பொருந்திய
பிறப்பினைப் போக்கியவன் எழுந்தருளிய இடம், மிகுதியான



அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
மருகன்வரு மிடபக்கொடி யுடையானிட மலரார்
கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே. ,,(6)



தடுக்காலுடன் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்
பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
கடல்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த.
விடைசேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே. (7)

ஓலைப் பாயால் உடலை மறைப்பவராகிய சமண முனிவர்களுடனும், பொன்னிற ஆடையால்
உடலை மூடிப்பிடகம் என்னும் நூலைத் தம் மத வேதமாக உரைக்கும் புத்த
மதத்தலைவர்கள் உடனும் நம் பெரியோர் நட்புக் கொள்ளார்.


மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்
குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்
பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே. ,(8)


மதம் பொருந்திய யானைகள் தம்மின் வலிய சிங்கம் வருதலைக் கண்டு அஞ்சி
மலையைக் குத்திப் பெருமுழையாக்கி, அதனிடை வைகும் கொடுங்குன்றம்,
புத்தர்களும் பொல்லா மனமுடைய சமணர்களும் புறங்கூறத் தன் பக்தர்கட்கு
அருள் செய்பவனாகிய சிவபிரான் மேவிய பழமையான நகராகும்



மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
சித்தம் முடை யடியாருடல் செறுநோயடை யாவே. (9)


சித்தத்தில் செருக்குடையவரும், சிறிதும் மதியில்லாதவரும் ஆகிய
சமணர்களும், புத்தர்களும் கூறும் பொருளற்ற உரைகளை ஒரு பொருளாக
நினையாதீர். நாள்தோறும் நாம் பழகி வழிபடுமாறு, குற்றமற்ற சிவபிரான்
உறையும்



நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்
போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
ஆதியவர் கோயில்திரு வாலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே. ,(10)

நீதி அறியாத அமணராகிய கீழ் மக்களும் பிச்சைப் பாத்திரத்தைக் கையில்
ஏந்திப்போதிமரத்தடியில் உறையும் புத்தமதத்தினரும் கூறும் உரைகளை மெய்ம்மை
எனக்கொள்ளாமல், திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் எல்லாப் பொருள்கட்கும்
ஆதியானவனாகிய இறைவனை,



தடுக்கையுட னிடுக்கித்தலை பறித்துச்சமண் நடப்பார்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. (11)


பனை ஓலையால் செய்த தடுக்கைத் தம்கையில் இடுக்கிக்கொண்டு தலையிலுள்ள
உரோமங்களைப் பறித்து முண்டிதமாக நடக்கும் சமணரும், உடுத்துவதற்குரிய
காவியுடைகளை அணிந்து திரியும் புத்தரும் அறிய இயலாதவனாய், துன்பம் நீக்கி
இன்பம் அருளும் இறைவனது இடம், தாமரை செங்கழுநீர் போன்ற மலர்களை

எழுதியவர் : பழனிராஜன் (8-Sep-20, 9:00 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 142

மேலே