சாளரப்போர் நிம்மதி உன்விருப்பம்

அண்டை அயலார் அமைதியாக வாழ்ந்திடின்
நெஞ்சுக்கு நிம்மதி யாம்

கொண்டை உயர்த்திஅண் டையில்கோ ழிச்சண்டை
லைவ்டிவி காட்சி உனக்கு

சண்டை சமர்பானி பட்டோமா பாரதமோ
சன்னலைநீ மூடி விடு !

பாத்திர ஆயுதங்கள் ஏவுகணை யாய்பாய்ந்து
உன்னையும் தாக்கக்கூ டும் !

சமூக விலகலின் சாத்திரம் நோயிற்கும்
சன்னல்போ ருக்குமொன் றே !

சமாதான நல்விரும்பி யாய்இடைசென் றால்விழுப்
புண்ணில் திரும்புவாய் வீடு

அண்டையில் சாளரப்போர் நிம்மதி உன்விருப்பம்
என்செய்வாய் சன்னலப்ப னே ?

வாஸ்த்துவை நீகேட்டால் மூடுசன்ன லைஎன்பான்
நான்வேறா செப்புகின் றேன் !?

எழுதியவர் : கவின் சாரலன் (13-Sep-20, 10:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே