தாத்தா பாட்டி தினம்

தாத்தா பாட்டியுடன் நாளொரு மேனி
பொழுதொரு வண்ணமாக
நாம் வாழ்ந்து மகிழ்ந்த நாட்கள்
மிகவும் இனிமையோ இனிமை..!!

இன்று இருக்கும்
சில சிறுவர் சிறுமியர்களுக்கு
கால சூழ்நிலை மற்றும்
குடும்ப சூழ்நிலை காரணமாக
தங்களது "தாத்தா பாட்டியுடன்"
வாழ்கின்ற வாழ்க்கை சுகம்
எட்டாக்கனியாக இருக்கு...!!

தாத்தா பாட்டியுடன் வாழ்கின்ற
வாய்ப்பினை இழந்த
சிறுவர் சிறுமியர்கள்
"தாத்தா பாட்டி தினம்" என்று
கொண்டாடி மகிழ்கிறார்கள்..!!
அவர்கள் அனைவர்க்கும்
இனிய வாழ்த்துக்கள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Sep-20, 10:14 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 56

மேலே