நவீன கவிஞன்
------------------
பேனா இல்லை..
காகிதம் இல்லை..
எழுதிய தவறை
அடிக்கவும் இல்லை..
அழித்து எழுத
அழிப்பான் இல்லை..
காகிதம் தாங்க
அட்டை இல்லை..
கசக்கிய காகித
குப்பை இல்லை..
நால் விரல் மேலே
லேசாய் கைப்பேசி..
கட்டை விரல்
தட்ட பிறக்குது
கவிதை சிசுவாய்..
நதிக்கரை ஓரம்
பூங்கா இருக்கை
விடியற்காலை
சாயங்காலம்
காலம் பார்த்து..
தேடி அமர்ந்து
எழுதியது இல்லை..
சமைக்கும் மனைவி
குக்கர் சத்தம்
ஆடும் சுட்டிகள்
ஓடும் தொலைக்காட்சி
நடுவே இருக்கை
இருந்தும் உதிக்கும்
தேடிய வார்த்தைகள்..
தெளிவாய் பிறக்கும்
இவனுள் கவிதை..
தமிழ் தாகம் தீரா
தமிழர்கள் சிலரில்
நானும் ஒருவனாய்
இருப்பது நிறைவு..
---------------
சாம்.சரவணன்