மதிமயக்கி சிதைவாக்கும்
அரணாக இருக்கின்ற அரசாங்கம் கொடுக்குது
அருஞ்சுவை மிகுந்த சாராயம்
ஆபத்தால் வருகின்ற நோயுக்கும் அழகாக
அரசே செய்யுது பெரும் விளம்பரம்
கடை வைப்பதை எதிர்ப்போரை அடித்து விரட்டது
அறங்காக்கும் அதிகார அரசாங்கம்
மது குடிப்போரை மகிழ்விக்க உருவாக்குது
சிறு தீனி உருவாக்கும் பெருங்கூடம்
அமலாக்க பிரிவென்ற ஒரு காவல் படையை
எதற்காக வைத்திருக்கு அரசாங்கம்
உருவாகும் பெருங்குற்றம் யாவைக்கும் காரணம்
மதிமயக்கி சிதைவாக்கும் சாராயம்
பஞ்சத்தில் அரசாங்கம் பணமின்றி இருக்கையில்
பணங்கொழிக்கும் கடையை எப்படி அது மூடும்
வேண்டியதைக் கொடுக்க வீரமாய் இருக்கும்
அரசாங்கம் செய்வது எப்படி தவறாகும்
பத்தில் எட்டுபேர் வேண்டியதைத் தருவது
சட்டத்தில் சொல்லிய கருத்தாகும்
கூட்டியும் பெருக்கியும் வகுத்தும் கழித்தும் பார்த்தால்
குக்கலைப் பிடித்து நாவிக் கூண்டினில் அடைத்ததாகும்
------ நன்னாடன்.