நான் பெற்ற அன்பு மகளே

நான் பெற்ற அன்பு மகளே
உன்னாலே சித்தம் தெளிந்தேன்
இந்த உலகத்தின் ஆழ பாசத்தை
உன் சிரிப்பினிலே உணர்ந்தேன்
நீரின் ஆற்றல் வேகத்தை
எச்சில் பட்ட முத்தத்தில் அறிந்தேன்
என் கவியின் சரணத்தின் வார்த்தையை
உன் கால் கொலுசினில் கண்டேன்
என் இதயம் அமைதியாவதை
நீ என் மார்பில் உறங்கையில் உணர்ந்தேன்
கண்ணே உன் கண்ணின் வழியே
கற்பனை மிகு சொர்க்கத்தை கண்டேன்
குளிருகின்ற கதிரின் அனலை
குயிலே உன் குரலினில் உணர்ந்தேன்
எத்தனையோ இடர்கள் சூழிணும்
மொத்தத்திற்கும் திருவழி நீதானே
நறுமலராய் தோன்றிய சிறு பூவே
நான் வாழ நீ தான் ஆணிவேரே
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (9-Nov-20, 6:52 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே