பொல்லாப்பை பிணியாக

கற்பனை காவியத்தை குறைப்போம்
கதைகள் பேசி திரிவதை தவிர்ப்போம்
உற்சாகமாய் உழைப்பதற்கு முயலுவோம்
உரிமைகளை ஒவ்வொரு நாளும் கேட்போம்
ஒன்றாய் நின்றே தீமைகளை எதிர்ப்போம்
ஒவ்வொன்றாய் செயல்களை முடிப்போம்
கடமை தவறுவோரை கண்டிப்போம்
காத்திருப்பதில் உண்மையை உணருவோம்
வீண்பேச்சின் வீரத்தை அழிப்போம்
விவேகமான சூழலை ஏற்போம்
பழிவாங்குவதை பாங்குடன் அகற்றுவோம்
பஞ்சத்தை போக்க பாடுபடுவோம்
இயற்கையோடு இணைந்து இருப்போம்
இல்லாமையை இல்லாமல் ஆக்குவோம்
பொல்லாப்பை பிணியாக எண்ணுவோம்
போதுமான அளவு மட்டும் சேர்ப்போம்
நல்லதை நாலு பேருக்கேணும் உரைப்போம்
நயமாக பேசி தீயோரை மாற்றுவோம்.
------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (28-Sep-20, 5:37 pm)
பார்வை : 49

மேலே