பாரதி பெண்!

வந்தாள் பாரதி பெண்,

வந்தாள் பாரதி பெண்!

கண்ணில் நீரோடு வந்தாள் பாரதி பெண்!

இத்தனை நாள் காத்திருந்தோம்!

பாரதியின் தேடலை நாமும் தேடினோம்!

இருந்தும் அழுகாச்சி பொம்மைகளாய்- பெண்கள்!

அவர் கேட்டது என்ன?

சம உரிமை பெண்களுக்கும்....

பெண்களே அதை தவிர்த்தால் எப்படி?

வீதியில், பெண் தனியாக நடந்தால்,

சுற்றிலும் ஆண்கள் துணையாக அல்ல,

வினையாக வினை செய்ய!

அச்சமில்லை இனி பெண்களுக்கு,

என்றுரைத்தான் அன்றே பாரதி!

இன்றும் அச்சத்தோடு பெண்கள்-பாரதி பெண்கள்

இனி முதல் தேவை-

"பாரதி பெண் அல்ல"

"பாரத ஆண்! பாரதி ஆண்!"

பின் பிறப்பாள் பாரதி பெண்

பாரதத்தில் பாரதத்தில்!!








எழுதியவர் : க.ரகுராம் (21-Sep-11, 9:03 pm)
சேர்த்தது : ரகுராம்.க
பார்வை : 445

மேலே