விளையாட அழைக்கிறது

விளையாட அழைக்கிறது

ரம்மி விளையாட
வம்பில் அழைக்கிறது
முக நூலில்
ஒரு விளம்பரம்

அதற்கு விளம்பரம்
செய்ய
கெளரவமாய் காட்சியளிக்கும்
சில மனிதரும் மங்கையரும்

முகநூலும், ஆண்டிராயுடும்
இன்று அவசியமாய்

கல்வி கற்பதற்கும்
கை நாட்டு நண்பர்களும்
தொட்டு உரசி உறவு
கொள்ளும் தொடர்பிணைப்பு

சபலமும், சலனமும்
கவர்ந்திழுத்து
விளையாட சென்று
விட்டு லட்சம் லட்சமாய்
இழப்புக்களை செய்திகளாய்
கேட்டும்

அரசு ஏனோ மெளனமாய் !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Oct-20, 3:44 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 214

மேலே