இந்தியைப் படித்தால்

இந்தியைப் படித்தால் என்ன கெடுதல் நேரும்
இரவலில் பிறந்த மொழிமேல் கரிசனங்கூடும்
இருபத்தொன்பது இந்திய மாநிலங்களிலே
பத்தில் மட்டும் இந்தி மொழி பற்றுதலாய்
பாவம் யாருக்கும் இந்தி தாய்மொழி இல்லையே
பீகார் மாநில இந்தி பாராளுமன்றத்திற்கு புரியாதாம்
மோடி வித்தை இந்தியை வளர்க்க தூண்ட துணியுது
பாரம்பரியம் பழமை அறவே இந்திக்கில்லை
பாரசீகம் உருது அரேபியம் சமட்கிருதம் கலப்பாம் இது
இந்திய அரசியல் சாசனம் 343(1) கீழ் அலுவல் மொழி
இதைக்கற்று அறிந்தால் இல்லாத பிம்பம் மறையும்
இன்பத்தமிழ் மீது கொள்ளைப் பிரியங்கூடும்
இந்தியை எள்ளி நகையாட நிறைய சொற்கள் சேரும்
உள்ளே வரும் இந்திக்காரனை கூச பேச தோணும்
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (31-Oct-20, 8:01 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 68

மேலே