பாசம் தொலைத்த சகோதரம்

பாசம் தொலைத்த சகோதரம்

இறுகப் பற்றிய
அறுவரின் கரங்கள்
இளகி தளர்ந்தது எப்போது
பணமும் பதவியும்
பாம்பாய் நெளிந்து
நுழைந்தது அப்போது

ஒருவருக்காய் பரிந்து
பிறிதொருவர்
பாசம் இழந்தேன்
உங்களுக்காய்
செலவிட்டு
எனக்கான
நேரம் இழந்தேன்
எண்ணக்குவியல்
என்றுமே நீங்களென
என் தடம் மறந்து
உங்களைத் தொடர்ந்து
இன்று
உங்களையும்
தொலைத்து
வீதியில் நான்
நிர்கதியாய்
நிற்கின்றேன்.

எழுதியவர் : இவானா (9-Nov-20, 6:00 pm)
சேர்த்தது : இவானா
பார்வை : 108

மேலே