உயிரே சொல்லாமல் நீ எங்கு சென்றாய் 555

***உயிரே சொல்லாமல் நீ எங்கு சென்றாய் 555 ***


என்னுயிரே...


ஆடை மழை காலத்தில்
உன்னை சந்திக்க ஆசையடி...

உன் விழிகளின் சூட்டில்
ஒரு முத்தம் வாங்க ஆசையடி...

குடையின்றி நடந்து
வந்தேன் உன் வீட்டருகே...

எப்போதும்
எனக்காக திறந்திருக்கும்...

உன் வீட்டு சன்னல் கதவு இன்று
ஏனோ அடைத்திருந்ததடி...

உயிரே சொல்லாமல்
நீ எங்கு சென்றாய்...

உன் இதயகூட்டுக்குள் நான்
அடைபட்டு கிடக்கிறேன்...

உன்னிடம் முத்த
மழை வாங்க வந்த நான்...

வான் மழையில் நனைகிறேன்
உன் வீட்டு வாசலில்...

என் உடல் கரைந்து
செல்லுமுன்னே...

உன் தாவணியால் எனக்கு
குடைபிடிக்க வாடி என்னுயிரே.....


*முதல் பூ பெ.மணி.....*

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (9-Nov-20, 6:01 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 437

மேலே