காதல்
இனிய பொன்மாலைப்பொழுதும் போனது
இன்பம்போய் துன்பம் வருவது போல
மாலையின் மஞ்சள் வெய்யல் போய்
காரிருள் சூழ்ந்துகொள்ள மன்னன்
வருகைக்கு காத்து நின்றவள் முகம்
வாடி சோர்ந்திட அவள் தோழியும்
ஆவலுடன் சேர்ந்தே வாடா தலைவி
இன்னும் அவன் வருகைக்கு காத்திருக்க
காரிருளைக் கிழித்து வந்தது முழுநிலவு
அதன் தன்னொளியில் மண்ணும் காய
தோழி நிலவை நோக்கி ' நிலவே
கொஞ்சம் காய்ந்திடுவாய் அத்திக்காய்
என்தலைவி தனிமை இருளை போக்கி
ஆறுதலாய் அவள் காதலன் வந்து
சேரும் வரை ' என்றால்