தூரத் தென்றல் சில்லெனும்

தூரத் தென்றல் சில்லெனும்

நேரிசை வெண்பா

தூரத்தென் றல்வர சில்லிடுமு டல்தானும்
பாரதரு கில்வரக்கா தும்சூடாம் -- சாரல்
வியர்வையாய் நெற்றிக் கசியவிடும் கைகால்
பயத்தால் நடுங்கியுத றும்

இது அந்தக் காலக் காதல்

தூரத்தில் காதலி வரும்போது தென்றலாய்க் குளிர்ந்து வீசும் ஆனால் அருகில் அவள்
வரும்போது இரண்டு காதின் மடல்களும் அளவுக்கும் மீறிச் சூடேரும். நெற்றியில்
மழைச்சாரலாய் வியர்வை பொழியும் ( துடைக்கத் துடைக்க) கைகால்கள் உதறும்

எழுதியவர் : பழனிராஜன் (19-Nov-20, 9:01 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 246

மேலே