இருவிழிகளில் ஏனடி இரு பார்வை 555

***இருவிழிகளில் ஏனடி இரு பார்வை 555 ***
என்னுயிரே...
மைபூசிய
உன் இருவிழிகளில்...
பார்வைகளும் இரண்டாக
ஏனடி உனக்கு...
ஒர பார்வையில்
என்னை
பார்க்கும் போது...
பார்க்கும் போது...
உயிர் கொடுக்கிறாய்...
நேருக்குநேர் பார்த்தால்
உயிரை வதைக்கிறாய்...
இருவிழிகளில்
ஏனடி இரு பார்வை...
நான் பார்க்காத
போது பார்ப்பதும்...
பார்க்கும் நேரத்தில்
பார்வை திரும்புவதும்...
ஏனடி உனக்கு
இந்த கள்ள பார்வை...
யாரும் திருட முடியாத
என் இதயத்தையே திருடிவிட்டாய்...
இன்னும் என்னிடம்
என்ன களவாட...
இந்த திருட்டு
பார்வை உனக்கு...
உன் பார்வையால் எனக்கு
உயிர் கொடுத்தவளே...
என்னை மடியில் வைத்து
தாலாட்டுபாட வந்துவிடடி.....