~என் இணைய தோழி~
எங்கோ பிறந்தாள் எங்கோ வளர்ந்தாள்
என்வாழ்விற்கு விடியலாய் இங்கே வந்தாள்
இணையத்தில் சந்தித்தோம் இரவு பகலாய் பேசினோம்
கணநேரமும் கண்ணிமைக்காமல் கதைத்தோம்
என் கண் கலங்கினால் அவளும் கலங்கினாள்
எனைக்காணாத நாளிலே தன்னையே தொலைத்தாள்..
நான் அழுதால் ஆறுதலாய் வந்தாள்
நான் துவண்டால் தோள்கொடுக்க வந்தாள்
நட்பிற்கு இலக்கணமாய் வந்து நின்றாள்
என் இணைய தோழி
-இணைய தமிழன்