Inaiyathamizhan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Inaiyathamizhan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Nov-2020
பார்த்தவர்கள்:  3834
புள்ளி:  51

என் படைப்புகள்
Inaiyathamizhan செய்திகள்
Inaiyathamizhan - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2020 9:26 am

அன்னம் இட்டவனோ நடுரோட்டில்
அழுது புலம்பிட விடியலும் இல்லை
ஆட்சியில் இருப்பவனோ அல்லல்படுத்த
ஆளநினைப்பவனோ அலட்சியப்படுத்த
இல்லையென்று வந்தவனை
ஈகையோடு அழைத்தவனோ- இன்று
ஈரமில்லா மிருகமொன்று
இரக்கமற்று கதைப்பேச
உழுதுஉழுது கலைத்தவனோ
உரிமைக்காக நடைப்பயில
ஊடகத்தின் கவனம் எல்லாம்
உள்ளுர் நடிகனிடம்
என்னதான் நடந்தாலும்
எண்ணமது மாறாது
ஏர்பிடித்த கையும் இன்றோ
ஏக்கமோடு வந்து நிக்க
ஏளனமாய் பார்த்தவனோ
அஞ்சிநடுங்கும் காலமிது
ஐயம் தெளிய வந்திடுமே
ஒற்றுமையாய் ஒன்றிணைந்தோம்
ஒடுக்கத்தான் பார்க்காதே
ஓயாது எந்தன் குரல்
ஓநாய்போல் சூழ்ச்சி செய்து
ஒடுக்கத்தான் பார்க்காதே
ஔவியம்தான் கொள்ளாதே

மேலும்

Inaiyathamizhan - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2020 5:04 pm

காவேரி நீருக்கு ஏங்கி தவித்த
என் நாட்டு விவசாயின்
குரல் கேட்டதோ என்னவோ
விண்மகளின் கடைக்கண் பார்வை இந்த மழை
அண்ணார்ந்து பார்த்தவனின்
கன்னத்தில் முத்தமிட்ட மழை
பூமித்தாயை தொட்டுவிட்டேன் என
மண்மனம்கமிழ உணர்த்திய மழை
-இணைய தமிழன்

மேலும்

Inaiyathamizhan - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2020 5:03 pm

அழகிய அந்தி வேளையிலே
என்னவளோடு கைகோர்த்து
வெகுதூரம் நடந்திட
அங்கோ ஒரு அழகிய மரம்
கண்டு அருகில் சென்றோம்
அநேரம் இடி இடிக்க என்னவள்
என்னை கட்டிஅணைத்திட
அவள் உச்சந்தலையில் முத்தம் இட்டு
வாழ்நாள் முழுக்க என்னுடனே
இருந்துவிடு என்றேன்
இதை சொல்ல இவ்வளவு
காலமா என்றாள்
எங்கள் கண்கள் பேசிட
குயில் கானம் பாடிட
கண்கள் முடிட அவள்
இதழை சுவைத்தேன்
என்மேல் விழுந்த மழை துளி
கண்டு கண்திறந்திட எதிராய்
கையில் வாளியுடன் நின்ற எந்தாய்
கேட்டாள் இன்னும் என்னடா உறக்கம் என்று
-இணைய தமிழன்

மேலும்

Inaiyathamizhan - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2020 5:02 pm

உன்ன உணவு இல்லை
உடுத்த உடை இல்லை
இருக்க இடம் இல்லை
கல்வியில் தரம் இல்லை
படித்தால் வேலை இல்லை
உழைத்தால் உயர்வு இல்லை
தமிழ் பேச ஆள் இல்லை
தமிழனுக்கு நீதி இல்லை
காதலில் உண்மை இல்லை
ஆனால்

நடித்தால் நாடு உண்டு
பணம் இருந்தால் புகழ் உண்டு
ஏமாற்றுபவனுக்கு உயர்வுண்டு
ஆங்கிலம் பேச்சிற்கு பெருமையுண்டு
பொய் பேசின் வாழ்வுண்டு

இவை அனைத்தும் உண்டு
என் தாய்த்திரு நாட்டில்

-இணைய தமிழன்

மேலும்

Inaiyathamizhan - Inaiyathamizhan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2020 6:46 pm

இருகூட்டில் வாழ்ந்திடும் இருஇதயமும்
பல்லிளிக்கும் பங்குனி வெயிலிலே
ஒருசேர ஒரு குடைக்குள் மறைந்துகிடந்தது
உலகின் இரண்டாம் நீண்ட கடற்கரையாம்
மெரினாவில்

நேற்று பெய்த மழையில் முளைத்த
காளான் போல
அடிக்கு ஒரு குடையாய்
காதலர்கள் என்று சொல்லி லயித்திருக்க
சுற்றமும் சுற்றிலும் மறந்து
கணநேரமும் வீணடிக்காமல்
காரியமே கண்ணாய் ஜோடிகள் கிடக்க

அங்கே மடியிலே கிடப்பவனுக்கோ
மடியைவிட்டு எழ மனதுமில்லை
முகங்கள் எங்கோ புதைந்திருக்க
கைகள் மட்டுமே பேசிக்கொள்ள
தேவைகள் மட்டுமே நிறைந்த அந்த உறவு
அங்கே காதலெனும் முகமூடி அணிந்து

காதல் அங்கும் மலர்ந்துகொண்டு இருந்தது
மண்ணில் கிடந்த மீன் துண்டை
பகிர்

மேலும்

படித்தமைக்கும் உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா 01-Dec-2020 3:47 pm
நச் என்ற ஒரு கவிதை 01-Dec-2020 9:05 am
Inaiyathamizhan - Inaiyathamizhan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2020 6:41 pm

ஐம்பது வருட மொழிப்போர் புரிந்து
பலஉயிரினை இழந்து
எம்மொழி காத்தான் என் பாட்டன்
இன்றோ புறம்வாசல் வந்தவனோ
அவன் மொழியை பறிகொடுத்து
இன்று எம்மொழியையும் பறிக்க துணிகிறான்
அந்நிய மொழியின் தயவில் பிரிந்த
உன் மொழி பெரிதெனின்
பல மொழி பிறக்க வழிவகுத்த
எம்மொழி பெரிதினும் பெரிது
அன்றோ உன் வேலையை பறித்தான்
வேடிக்கை பார்த்தாய்
இன்றோ உன் மொழியையும் பறிக்கிறான் இதையும் பொருத்தால்
நாளை உன் உயிரையும் பறிப்பான்
-இணையத்தமிழன்

மேலும்

மிகவும் நன்றி ஐயா 01-Dec-2020 3:45 pm
மெய்யாலுமே மெய் தான். 01-Dec-2020 9:07 am
மேலும்...
கருத்துகள்

மேலே