மொழிப்போர்
ஐம்பது வருட மொழிப்போர் புரிந்து
பலஉயிரினை இழந்து
எம்மொழி காத்தான் என் பாட்டன்
இன்றோ புறம்வாசல் வந்தவனோ
அவன் மொழியை பறிகொடுத்து
இன்று எம்மொழியையும் பறிக்க துணிகிறான்
அந்நிய மொழியின் தயவில் பிரிந்த
உன் மொழி பெரிதெனின்
பல மொழி பிறக்க வழிவகுத்த
எம்மொழி பெரிதினும் பெரிது
அன்றோ உன் வேலையை பறித்தான்
வேடிக்கை பார்த்தாய்
இன்றோ உன் மொழியையும் பறிக்கிறான் இதையும் பொருத்தால்
நாளை உன் உயிரையும் பறிப்பான்
-இணையத்தமிழன்