பிற மொழியை ஏசுகிறோம்

வடகத்திய ஆட்களுக்கு வளமாய் தெரியுது தொழில்
வானளாவிய அளவிற்கு பணம் சேருது கையில்
வரிந்துக்கட்டி அத்தொழிலை செய்ய முயன்றால்
வளமான அவர்கள் மொழி வசப்படாமல் நிற்குது

அவர்களோ இம்மாநில மொழியில் புலமைப் பெற்று
இம்மாநிலத்தில் தொழில் நம் மொழியில் செய்வதற்கே
எமக்கு அவர்கள் மொழியில் வேண்டும் நல் புலமை
காரணம் கேட்காதீர் நாமோ பிற மொழியை ஏசுகிறோம்

அவர்கள் செய்யும் அத் தொழிலை செய்ய வேண்டும்
அவர்களின் மாநிலத்திற்கு சென்று அவர் மொழியில்
இங்குள்ள எத்தொழிலையும் செய்ய துணிவில்லை
காரணம் கேட்காதீர் நாமோ பிற மொழியை ஏசுகிறோம்

அவர்கள் எம்மாநில மொழியையும் கற்கஉரிமையுண்டு
இங்கோ எம்மை அறையில் பூட்டி அடைத்துள்ளனார்
தாய் மொழியை மட்டுமே கற்க நிர்பந்திக்கின்றனர்
மீறி சென்றால் சோற்றையும் நீரையும் பிடுங்கி விரட்டி

ஆடத் தெரியாத அழகு ஆட்டச்சிறுக்கி சொன்னாளாம்
ஆகாயம் தெரியாத ஊரிலே ஆட்டம் ஆடுவேன் என்று
தேவைக்கு தேவையை தேர்ந்தெடுப்பது தனியுரிமை
திரவியம் தேட செல்ல தாயை தவிக்கவிடுவது தவறு
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-Nov-20, 5:54 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 32

மேலே