வழியின் நெடுகிலும்

தமிழும் தவழும் பொழுதெல்லாம் அமுதம் பொழியும்
வழியின் நெடுகிலும் எழிலும் தமிழால் நிறையும்
மொழிகள் யாவைக்கும் தாயான தமிழால் பெருமை
விழியாய் தமிழை அழகாய் காத்தலே நமது கடமை
விழலுக்கு பொழிந்த மழையாய் நாமும் இருந்துவிடின்
கார்குழலால் மறைத்த எழிலான வதனமாய் மறையும்
நெகிழ்வால் நெகிழ்ந்து நிறைவாய் தமிழை அறிந்தால்
அழிவே இல்லா ஆழ நிலையில் வாழ்வை பெறலாம்
தழைத்தே செழித்தால் பழுத்த பழமாய் இனிக்கும்
உழைப்போரை உறிஞ்சி பிழைப்போராய் பிற இருக்க
செழிப்பை தமிழில் சிறக்க செய்வதே நமது தவமாய்
இதழ் தோறும் எழில் மொழி இயம்புதலே கடமையாம்
தமிழின் நிழலில் உழன்றால் பிறந்த பயன் நிறையும்
விழுந்த தழையாய் அழுகி கிடக்கும் தமிழர் விழித்தால்
அழுத்தம் கொடுக்கும் அழுக்குகள் விழுங்கப்படும்
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (1-Dec-20, 8:39 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : vazhiyin nedukilum
பார்வை : 23

மேலே