தமிழ்

உன் தமிழில் பிழை உள்ளது
என்று கலங்கிவிடாதே
தமிழுக்கு நீ பிழை இல்லை
உன்னெழுத்தில் தான் பிழை
உள்ளதே தவிர
உன் உள்ளத்தில் பிழை இல்லை
வீறுகொண்டு எழு வீரத்தமிழைத் தொடு
விண்ணையும் தொட்ட தமிழ்
இம்மண்ணை ஆளும் நாளோ
வெகுதூரம் இல்லை
-இணையத்தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:06 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : thamizh
பார்வை : 1874

மேலே