நாகரிக தமிழர்

கண்ணுக்கு மைதீட்டி
கவிதைக்கு பொய் தீட்டி
அழகுக்கு மெருகேற்றி
இயற்கைக்கு கைகாட்டி
செயற்கைக்கு செருக்கூடி
ஆடைக்கோ அழுக்கேற்றி
உணவிலோ உப்பேற்றி (நச்சு உப்புக்கள்)
நம் தாய்மொழியாம்
தமிழுக்கு தீமூட்டி
ஆங்கிலத்தை பாராட்டி
நாகூசாமல் நாள்தோறும்
சொல்வோம் நவநாகரிக
தமிழர் என்று
- இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:10 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : naakarika thamizhar
பார்வை : 27

மேலே