இல்லாமை

உன்ன உணவு இல்லை
உடுத்த உடை இல்லை
இருக்க இடம் இல்லை
கல்வியில் தரம் இல்லை
படித்தால் வேலை இல்லை
உழைத்தால் உயர்வு இல்லை
தமிழ் பேச ஆள் இல்லை
தமிழனுக்கு நீதி இல்லை
காதலில் உண்மை இல்லை
ஆனால்

நடித்தால் நாடு உண்டு
பணம் இருந்தால் புகழ் உண்டு
ஏமாற்றுபவனுக்கு உயர்வுண்டு
ஆங்கிலம் பேச்சிற்கு பெருமையுண்டு
பொய் பேசின் வாழ்வுண்டு

இவை அனைத்தும் உண்டு
என் தாய்த்திரு நாட்டில்

-இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 5:02 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : illamai
பார்வை : 191

மேலே