பெனின் வாழ்கை

பள்ளி சென்றபோது
ஏறெடுத்தும் பார்த்ததில்லை !
கல்லூரி சென்றபோது
குனிந்த தலைநிமிரவில்லை !
வேலைக்கு சென்றபோதும்
வேடிக்கை பார்த்ததில்லை !
பெண்பார்க்க வந்தப்போதும்
பாசமாய்ப் பேசவில்லை !
கல்யாணமேடையிலும்
கண்ணெடுத்துப் பார்க்கவில்லை !

சமயற்கட்டில் கிடந்த நானோ ....
வெளியுலகம் கண்டதில்லை !!!

பிள்ளை வளர்ந்தால்...
நம் வாழ்வு ..
உயரும் என்று எண்ணினேன் !

அனைவரும் வளர்ந்திட ..
இன்றோ கிடக்கிறேன் முதியோர் இல்லத்தில் !

- இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 4:20 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
Tanglish : penen vaazhkai
பார்வை : 59

மேலே