கனவு
அழகிய அந்தி வேளையிலே
என்னவளோடு கைகோர்த்து
வெகுதூரம் நடந்திட
அங்கோ ஒரு அழகிய மரம்
கண்டு அருகில் சென்றோம்
அநேரம் இடி இடிக்க என்னவள்
என்னை கட்டிஅணைத்திட
அவள் உச்சந்தலையில் முத்தம் இட்டு
வாழ்நாள் முழுக்க என்னுடனே
இருந்துவிடு என்றேன்
இதை சொல்ல இவ்வளவு
காலமா என்றாள்
எங்கள் கண்கள் பேசிட
குயில் கானம் பாடிட
கண்கள் முடிட அவள்
இதழை சுவைத்தேன்
என்மேல் விழுந்த மழை துளி
கண்டு கண்திறந்திட எதிராய்
கையில் வாளியுடன் நின்ற எந்தாய்
கேட்டாள் இன்னும் என்னடா உறக்கம் என்று
-இணைய தமிழன்