~தள்ளி போகாதே~

பேருந்தில் சண்டை இட்டு எதிரி ஆனான்
காதலன் விட்டு சென்றபோது
கைகொடுத்து தோழன் ஆனான்
காதலனை நினைத்து கண்ணீரோடு இருந்த பொது
கண்ணீரோடு சேர்த்து என் இதழை ருசித்து
காதலிக்கிறேன் என்றான்

நண்பனும் வேண்டாம் காதலும் வேண்டாம்
கல்வியே போதும் என்றேன்
எதிராய் வந்தவன் கண்ணில் நீர்மல்க கட்டி அணைத்தான்

இதுதான் காதலா என மயங்கி விழுந்தேன்
இது தான் காதல் என்று தாங்கி பிடித்தான்
- இணைய தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (1-Dec-20, 5:01 pm)
சேர்த்தது : Inaiyathamizhan
பார்வை : 256

மேலே