நட்பு

என்னை எனக்கே அடையாளம்

காட்டிய உறவு !

என்னை நானாக முழுவதுமாக

ஏற்று கொண்ட உறவு !

என்னுள் இரண்டற கலந்தது

உன் உறவு!

ரோஜாவிற்கு அழகோ அதன்
இதழ்கள்

எனக்கு அழகு உன் நட்பு !


நான் தவறு செய்கையில்


என்னை வழிநடத்தும் கலங்கரை

விளக்கு உன்நட்பு !


நான்அன்பிற்காக வாடியபொழுது
எனக்கு அன்புகாட்டுவதில்

தாயாக

மாறியது உன்நட்பு !


நான் தவறு செய்கையில்

என்னை தட்டிக் கேட்க

முதலில் நின்றது - உன் நட்பு

எனக்காக உன் உயிரை கூட

துட்ஷமாக எண்ண தயாராக

இருந்தாய்

நண்பன் என்ற

நான்கெளுத்தில்

என் வாழ்க்கையில் ஓர் புதிய

பாதையை நீ வகுத்தாய் !

நான் என்னைப்பற்றி

நினைக்கையில் நீ

தான் என்முன் வருகிறாய்

இதன் காரணமோ நீ என்னுள்

இரண்டற கலந்துள்ளாய்

என்பதற்காகவா ?

நல்ல நண்பன் சிற்பிக்குள்

இருக்கும்

முத்துப்போல என்றும் தனது

முக்கியத்துவத்தை ஆடம்பரமாக

காட்டியதில்லை!

போட்டி பொறாமை அற்ற உறவு

நட்பு என்பது அனைவரின்
வாழ்வில்

கிடைக்கும் எளியபூ _என்றாலும்

அதனுள் புதைந்துள்ள

இனிமையோ உலக

பூக்களிடமிருந்து தனித்துவம்

வாய்ந்தது!

மனிதனக்கு நல்ல

தாய் தந்தையர்

இல்லை_ என்றாலும் நல்ல

நண்பன்

இருந்தானெனில் _அவன்

வாழ்வு ஓர் பூந்தோட்டமாகும்!

நல்ல நண்பன்

உலகில் ஆயிரம்

புத்தகங்களுக்கு சமமாகும் !

நட்பு என்ற உறவு மட்டும்

மனிதன் தானாக

முழுமனதுடன் தேர்ந்தெடுக்கும்

உறவு !

நட்பால் வாழ்ந்தார் பலர் உண்டு

வீழ்ந்தவர் என்று

யாருமில்லை!

நல்ல நண்பன் கிடைப்பது

அரிது_ அதனினும் அரிது தூய

மனதுடன் !!!!

எழுதியவர் : DHIYA (1-Dec-20, 4:57 pm)
சேர்த்தது : DHIYA
Tanglish : natpu
பார்வை : 301

மேலே