உரிமையின் குரல்

அன்னம் இட்டவனோ நடுரோட்டில்
அழுது புலம்பிட விடியலும் இல்லை
ஆட்சியில் இருப்பவனோ அல்லல்படுத்த
ஆளநினைப்பவனோ அலட்சியப்படுத்த
இல்லையென்று வந்தவனை
ஈகையோடு அழைத்தவனோ- இன்று
ஈரமில்லா மிருகமொன்று
இரக்கமற்று கதைப்பேச
உழுதுஉழுது கலைத்தவனோ
உரிமைக்காக நடைப்பயில
ஊடகத்தின் கவனம் எல்லாம்
உள்ளுர் நடிகனிடம்
என்னதான் நடந்தாலும்
எண்ணமது மாறாது
ஏர்பிடித்த கையும் இன்றோ
ஏக்கமோடு வந்து நிக்க
ஏளனமாய் பார்த்தவனோ
அஞ்சிநடுங்கும் காலமிது
ஐயம் தெளிய வந்திடுமே
ஒற்றுமையாய் ஒன்றிணைந்தோம்
ஒடுக்கத்தான் பார்க்காதே
ஓயாது எந்தன் குரல்
ஓநாய்போல் சூழ்ச்சி செய்து
ஒடுக்கத்தான் பார்க்காதே
ஔவியம்தான் கொள்ளாதே
ஊதியம்தான் கேட்கின்றேன்
-இணையத்தமிழன்

எழுதியவர் : இணையத்தமிழன் (5-Dec-20, 9:26 am)
சேர்த்தது : Inaiyathamizhan
பார்வை : 1569

மேலே