மௌன மொழி
ஆயிரம் மொழி பேசி
அடுத்தவர்களை
அசர வைக்கக்கூடிய
திறமை பலரிடம்
இருக்கலாம்...!!
ஆனால்...
மௌன மொழிபேசி
அனைவரின்
புருவங்களையும்
உயர செய்து தன்னிடம்
இழுக்கும் திறமையும்...!!
பேச வேண்டிய
விஷயங்களை
பேசாமலே
புரிய வைக்கும் திறமையும்
உலகத்தில்
ஒரு சிலரிடம் தான்
பார்க்க முடியும்..!!!
--கோவை சுபா