என் அப்பா

சந்தன கட்டையை போல்
தன் உடலை
தேய்த்து தேய்த்து
எங்கள் குடும்பத்தை
சந்தன மணம்
வீச செய்தார்
"என் அப்பா"

அந்த சந்தன மணத்தை
"என் அப்பா"
முகர்ந்து
பார்த்திருப்பாரா...??
என்று இப்போது
நினைத்து பார்க்கிறேன்...
என் முயற்சிக்கு
தோல்வி தான் பதில்...

ஆனால்
தற்போது சுவரில்
பிரேம் போட்ட படத்தில்
சந்தன பொட்டுடன்
"என் அப்பா "....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (2-Dec-20, 8:00 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : en appa
பார்வை : 4448

மேலே