முதல் சந்திப்பு

உன் முகம்
பார்க்க போகும் ஆவலில்
என் முகத்தை அக்தர் கொண்டு அலசி
வானம் என்னும் கொடியில்
காய்ந்துக் கொண்டிருந்த வானவில்லை
எடுத்து மடித்து முகம் தொடைத்துவிட்டு
காற்றை முந்திக்கொண்டு
ஓடோடி வந்தேன்!
வரும் வழியில் எல்லாம்
முகில்கள் சேர்ந்து
முத்துத்தூரல் பொழிந்தது!
சாரல் மழையில்
நான் கொஞ்சம் நனைந்தேன்!
நீ இருக்கும் இடம் தேடி
அங்கும் இங்குமாய் அலைந்தேன்!


உன் தேன் முகம் கண்டேன்
கண்டதும் திகைத்து நின்றேன்
இவ்வுலகம் யாவும் இருண்டு
பகலில் நிலவொன்று
என் கண் முன் நின்று ஒளிர கண்டேன்..


சந்தித்ததும் தித்தித்தது!
நெஞ்சம் பூரித்தது!


பொன் புன்னகை மொழிந்தாய்!
என் நாணத்தின் திரை களைந்தாய்!


முகங்கள் கண்ட பின்
மெளனத்தில் கரையாமல்
இடைவெளியின்றி இதழ்
சிரித்துப் பேசி மகிழ்ந்தோம்..


பேசி களைத்த பின்
பாசமாய் படைத்து
பக்குவமாய் பாட்டிலில் அடைத்து
பருக தந்த பாதம்கீர்
அமிர்தமாய் இருந்தது
உதரம் தாண்டி
உள்ளத்தையும் நிறைத்தது...


உன்னிடம் பேசிய
சில மணித்துளிகள்
இதயத்தில் இனிப்பாய் இனித்தது...


பிரியாவிடை பெற்று
அறை விட்டு வெளியே வந்த நான்
விறுவிறுவென்று நடந்து
வீடு சென்று சேர்ந்தேன்
வீடு வந்த பின்பு தான் தெரிந்தது
நான் இருந்த இறுக்கையிலேயே
என் இதயத்தை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன் என்று..!


பெண்ணே!
மறுமுறை உனைக்கான வரும்போது
மறக்காமல் பெற்றுக் கொள்கிறேன்
மனதை பத்திரமாக பார்த்துக் கொள்!!!


உன் முதல் சந்திப்பின்
நீங்கா நினைவுகளுடன் நான்!!!


கவிதைகளின் காதலன்
❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-20, 5:32 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : muthal santhippu
பார்வை : 1279

மேலே